Home வவுனியா அனுரவுக்கு எதிராக போராட அனுமதி!

அனுரவுக்கு எதிராக போராட அனுமதி!

by ilankai

அநுரகுமார திஸாநாயக்கவின் வருகையை முன்னிட்டு நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தடையுத்தரவு கோரிய வவுனியா காவல்துறையினரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அனுர நாளை வவுனியா  நகரசபை மைதானத்திற்கு வருகை தரவுள்ள நிலையில்  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

அவ்வாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் எனவும் தெரிவித்து காவல்துறையினர் குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு கோரியிருந்தனர்.

இதனை கவனத்தில் எடுத்த மன்று, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வது மக்களின் ஜனநாயக உரிமை அதனை தடுக்க முடியாது.

ஆனால் அமைதிக்கும் பங்கம் ஏற்படும் வகையில் யாராவது செயற்பட்டால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்து தடையுத்தரவு கோரிக்கையை மன்று நிராகரித்துள்ளது.

Related Articles