3
யாழ்ப்பாணத்தில் வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் யாழ் . புறநகர் பகுதியில் உள்ள யுவதி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டுள்ளார்
இது தொடர்பில் குறித்த யுவதியால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , பொலிஸ் உத்தியோகஸ்தரை கைது செய்து , விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் பொலிஸ் உத்தியோகஸ்தரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினம் அடையாள அணிவகுப்பை நடத்தவும் திகதியிட்டுள்ளது.