Home இந்தியா காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி!

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு 27 பேர் பலி!

by ilankai

இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் உள்ள ஒரு பிரபலமான அழகிய பஹல்காம் நகரைப் பார்வையிடச் சென்ற சுற்றுலாப் பயணிகள் குழு மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இன்று செவ்வாய்க்கிழமை நான்கு துப்பாக்கிதாரிகள் பல சுற்றுலாப் பயணிகள் மீது அருகில் இருந்து சுட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காமில் இருந்து சுமார் மூன்று மைல் (5 கி.மீ) தொலைவில் உள்ள பைசரன் புல்வெளியைப் பார்வையிட்ட சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

கொல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகளில் பலரும் இந்தியர்களே. இந்த தாக்குதலில் தமிழர்களும் காயம் அடைந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பரமேஸ்வரம், சந்துரு, பாலச்சந்திரா ஆகிய 3 பேரின் விவரம் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் தொடங்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பஹல்காம். இது காஷ்மீர் மாநிலத்தில் அனந்தநாக் மாவட்டத்தின் வடக்கே அமைந்த அற்புதமான மலைப்பகுதி சுற்றுலாத் தலம் ஆகும். அனந்தநாக் நகரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில், லித்தர் பள்ளத்தாக்கில், லித்தர் ஆற்றங்கரையில்பஹல்காம் அமைந்துள்ளது. மிகவும் அருமையான இந்த சுற்றுலா தலம் இமயமலையில் 7200 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

Related Articles