6
யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.
வலி. வடக்கு வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22) எனும் யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மூளைக்காய்ச்சல் காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.
Related Posts
யாழ்ப்பாணம்
Post a Comment