Home இலங்கை CCTV கமராக்கள் மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தண்டம்

CCTV கமராக்கள் மூலம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தண்டம்

by ilankai

கொழும்பு நகரைச் சுற்றியுள்ள CCTV கமராக்கள் மூலம் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வாகன விதிமீறல்களைச் செய்த 4000இற்கும் மேற்பட்ட வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி குறித்த வாகன சாரதிகளின் வீடுகளுக்கு அவர்கள் செய்த வாகன விதிமீறல்கள் தொடர்பாக அறிவிக்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல், கொழும்பு நகரைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கமராக்கள் மூலம் வாகன விதிமீறல்களைக் கண்டறியும் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், வீதி விதிகளை மீறிய 4048 வாகன சாரதிகளுக்கு எதிராக அபராதம் அல்லது நீதிமன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை இந்தத் திட்டத்தின் கீழ், உரிய முறையில் உரிமை மாற்றப்படாத 241 வாகனங்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related Articles