இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வருகை: வெளியுறவு துறை அறிவிப்பு!Authored byபவித்ரன் | Samayam Tamil | Updated: 18 Nov 2024, 8:24 pm
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக டிசம்பர் மாதம் முதல் அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அறிவித்துள்ளது.Samayam TamilAnura Kumara Dissanayakeஇந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடந்த சில ஆண்டுகள் முன்பு தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக நிதிநெருக்கடியில் சிக்கி இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக வன்முறை வெடித்தது. இதையடுத்து நாட்டை விட்டு ராஜபக்சே குடும்பத்தினர் தப்பி சென்றனா். அந்த சமயத்தில் இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார். இதையடுத்து அவரது நடவடிக்கையால் இலங்கையில் அமைதி திரும்பியது. மேலும் வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் அனுர குமார திசநாயக உள்ளிட்டோர் போட்டியிட்டனா். அந்த தேர்தலில் அனுர குமார திசநாயக அபார வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக இந்தியா வருகை: வெளியுறவு துறை அறிவிப்பு!
அவரது வெற்றி இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கும் என கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் அதிபராக தேர்வு செய்யப்பட்டபோது, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய 2 நாட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் எனவும், இந்தியாவுடன் நல்ல நட்பு கொண்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையே இலங்கையில் பிரதமர் தேர்தல் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது அதிலும் அனுர குமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அமோக வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இலங்கைகளில் பிரதமர் பதவியேற்பு உள்ளிட்டவை முடிந்த நிலையில், இலங்கை அதிபர் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக, இந்தியாவுக்கு தனது முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ள உள்ளார். வருகிற டிசம்பர் மாதம் அவர் இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தர உள்ளார்.
மீனவர் பிரச்சினை
இலங்கை மற்றும் இந்தியா இடையே உள்ள பிரச்சினைகள் குறித்தும், எதிர்கால திட்டங்கள் பற்றியும் இந்த சந்திப்பின்போது ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இருநாடுகள் இடையேவும் மீனவர்கள் பிரச்சினை தலையான பிரச்சினையாக உள்ளது. மேலும் இந்தியாவுக்கு எதிராக சீனா, இலங்கையை கொண்டும் பல்வேறு திட்டங்களை கடந்த காலங்களில் தீட்டி இருந்தது. இத்தகைய பரபரப்பான சூழலில் இலங்கை அதிபர் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வருகை தர உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஆசிரியர் பற்றிபவித்ரன் நான் பவித்ரன் தேவேந்திரன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். அரசியல், கிரைம் செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாநில, தேசிய, உலகச் செய்திகளை வழங்கி வருகிறேன்…. மேலும் படிக்க