Home Uncategorized தரையை தொடும் அளவுக்கு வளர்ந்த தந்தங்கள்.. குனிய கூட முடியாமல் அவதிப்படும் யானை முத்துராஜா.. மரு

தரையை தொடும் அளவுக்கு வளர்ந்த தந்தங்கள்.. குனிய கூட முடியாமல் அவதிப்படும் யானை முத்துராஜா.. மரு

by ilankai

தரையை தொடும் அளவுக்கு வளர்ந்த தந்தங்கள்.. குனிய கூட முடியாமல் அவதிப்படும் யானை முத்துராஜா.. மருத்துவர்கள் அதிரடி முடிவு!Authored byபஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | Updated: 24 Nov 2024, 4:04 pm

நீண்ட தந்தங்களால் உணவுக்கூட சாப்பிட முடியாமல் அவதிப்படும் முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். Samayam Tamil
தாய்லாந்து அரசு கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆண் யானை ஒன்றை பரிசாக வழங்கியது. ப்ளை சாக் சுரின் என அழைக்கப்பட்ட அந்த யானைக்கு இலங்கையில் முத்து ராஜா என பெயர் வைக்கப்பட்டது. தற்போது 29 வயதாகும் இந்த யானை இலங்கையில் கோவில் சடங்குகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த யானை கடந்த 2022 ஆம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தகவல் தாய்லாந்து அரசுக்கு தெரியவர, யானையின் உடல் நிலை குறித்து கேள்வி எழுப்பியதோடு கவலையும் தெரிவித்தது. இதையடுத்து இலங்கை கால்நடை மருத்துவர்கள் யானை முத்து ராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

காருண்யா லாட்டரியில் பல லட்சங்களை குவித்த 15 பேர்.. இன்று அக்ஷயா லாட்டரியில் காத்திருக்கம் ஜாக்பாட்!

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் யானை முத்துராஜா தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டது. முத்து ராஜா யானை நீண்ட தந்தங்களுடன் கம்பீரமாக காட்சியளித்து வந்தது. இந்நிலையில் அந்த நீண்ட தந்தங்களே யானைக்கு ஆபத்தாக ஏற்பட்டுள்ளது. தரையை தொடும் அளவுக்கு வளர்ந்துள்ள நீண்ட மற்றும் கனமான தந்தங்களால் சாப்பிடுவது உட்பட அன்றாட வேலைகளை கூட செய்ய முடியாமல் தவிக்கிறது முத்து ராஜா யானை.

அல்ட்ரா மாடர்னாய் மாறும் திருமலை திருப்பதி.. பக்தர்களுக்கு ஜாக்பாட்.. அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட TTD!

குறிப்பாக மலைகளில் செல்லும்போதும் சாலைகளில் நடந்து செல்லும் போதும் யானையின் தந்தம் தரையில் உரசுவதால் யானை தலையை தூக்கியப்படியே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யானையின் உடல் நிலத்தை கவனத்தில் கொண்டு தந்தங்களை கத்தரிக்க தாய்லாந்து மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. நாளை முதல் பேய் மழை.. சென்னைக்கும் வார்னிங் கொடுத்த வானிலை மையம்!

யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மருத்துவர்கள் பேசி வருவதாகவும், இருப்பினும் இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் அனுமதி பெற வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் யானையின் தந்தங்களை அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் குறைக்கப்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆசிரியர் பற்றிபஹன்யா ராமமூர்த்திசெய்தி சேனல், எஃப் எம் (RJ) மற்றும் டிஜிட்டல் ஊடத்துறையில் 13 ஆண்டுகள் அனுபவம். இதழியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளேன். பொது செய்திகள், அரசியல், க்ரைம், விளையாட்டு சினிமா மற்றும் உலக நடப்பு செய்திகளில் அனுபவம்.. தற்போது சமயம் தமிழில் சினிமா செய்திகளை அளித்து வருகிறேன்…. மேலும் படிக்க

Related Articles