ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு மத அனுஸ்டானங்களை நடத்தும் வடகிழக்கிலுள்ள தேவாலயங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை காவல்துறை இராணுவத்துடன் இணைந்து ஆரம்பித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை பெரிய வெள்ளி வழிபாடுகளும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத வழிபாடுகளும் தேவாலயங்களில் நடைபெறவுள்ளன.
அந்தவகையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு காவல்துறை பாதுகாப்பை செயல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
அதிக மக்கள் கூடும் தேவாலயங்கள் தோறும் படையினர் இரவு பகலாக களமிறக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பை பலப்படுத்த காவல்துறை வீதி சோதனைகளை ஆரம்பித்துள்ளது.
அதனிடையே ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பை உறுதி செய்வதற்காக காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே ஈஸ்டர் தாக்குதலை திட்டமிட்ட சூத்திதாரிகள் விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி அனுர அறிவித்துள்ளார்.தாக்கதலுடன் தொடர்புபட்டதாக பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.