Home யாழ்ப்பாணம் சந்திரசேகரனின் முறைகேடுகள் வெளிவருமா?

சந்திரசேகரனின் முறைகேடுகள் வெளிவருமா?

by ilankai

கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரனின் யாழ்ப்பாணத்தில் செய்த முறைகேடு உள்ளிட்ட சித்து விளையாட்டுக்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படுமென  வலிகாமம் கிழக்கின் முன்னாள் தவிசாளர் நிரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார மேடைகளில் ஜனாதிபதியின் பிரசாரப் பேச்சுக்கள் மிகவும் கீழ்த்தரமானதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கின்றன.

அதேவேளை பல பொய்களை கூறி மக்களை ஏமாற்றிய அநுர அரசு, அதில் தோல்விகண்டு இயலாமல் போனதால் தற்போது அச்சுறுத்தும் செயற்பாடாக தன்னை முன்னெடுக்க முயல்கின்றது.

அவை மட்டுமல்லாது சந்திரசேகரன் குழுவினர் பலூன் ஊதிக்கொண்டிருக்கும் ஒரு சிறு பிள்ளைகள். அந்த பால்குடிகள் ராஜபக்சர்கள் கூட செய்யாத அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் அட்டூழியங்களையும் செய்கின்றனர்.

எனவே மக்கள்; தெளிவாக இருப்பது அவசியம். அதுமட்டுமல்லது தமிழ் மக்களின் பிரதேசங்களில் காலூன்றினால் அது தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்பையும் இல்லாது செய்துவிடும்.

தமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்துவோம், ஊழல் மோடிகளை இல்லாதொழிப்போம், சமூக சீர்திருத்தங்களை செய்வோம் என்று கூறிவரும் சந்திரசேகரன் குழுவினர் யாழ்பாணத்தில் பல கிராமங்களிலும் சமூக சீர்கேடாக பல விளையாட்டுக்களை செய்கின்றார்கள்.

அவர்களது சித்து விளையாட்டுக்கள் விரைவில் புகைப்படங்களாகவும், காணொளிகளாகவும் வெளியாகும்.” எனவும் நிரோஸ் தெரிவித்துள்ளார்.

Related Articles