“இனவாதத்துக்கு இடமில்லை என்று கூறும் அநுர அரசே தையிட்டி விகாரையின் கட்டுமானத்துக்கு முக்கிய கரணமாக இருந்தது. அவர்களே அன்று இந்த திஸ்ஸ விகாரையின் கட்டுமாணம் ஆரம்பிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, விகாரையை அமைக்கும் நடவடிக்கைக்கு யாழ்ப்பாணத் தமிழர்கள் மதவாதம் பேசுவதாக கூறி சிங்கள மக்களை திசைதிருப்பி விகாரையை கட்டிமுடிக்கச் செய்திருந்தனர் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இன்று குத்துக்கரணம் அடித்து மக்களை ஏமாற்றி எமது மக்களின் நலன்களை முன்னிறுத்தி போராடும் தமிழ் அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மீது குற்றச்சாட்டை சுமத்தி அரசியல் செய்கின்றனர்.
இனவாதத்தை தூண்டும் தேசிய மக்கள் சக்தி, தமிழ் கட்சிகள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை கூறி அவர்களது உச்சபட்ச இனவாதத்தின் வெளிப்பாட்டை காடுகின்றனர்.
முன்னைய அரச தலைவரான கோட்டாவுக்கு அவரது உண்மை முகத்தைக் காட்ட இரண்டு வருடம் தேவைப்பட்டது . ஆனால் இந்த ஜேவிபியின் உண்மையான முகம் 6 மாதங்களுக்கள் வெளிப்படுவிட்டதெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.