Home மட்டக்களப்பு அடையாளம் காணப்படாத சடலம் அடையாளம் காணப்பட்டது

அடையாளம் காணப்படாத சடலம் அடையாளம் காணப்பட்டது

by ilankai

மட்டக்களப்பு, ஓட்டமாவடி – மீராவோடை சந்தையின் பின் பகுதியிலுள்ள ஆற்றில் வெள்ளிக்கிழமை (18) அதிகாலை சடலம் ஒன்று மிதந்து வந்துள்ளது. 

ஆற்றில் மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்டு காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

அடையாளம் காணப்படாத சடலம் ஆற்றிலிருந்து மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் முன்னெடுத்தனர்.

விசாரணையின்போது சடலமானது ரான் – பிரம்படித்தீவு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வேலு கிட்ணப்பிள்ளை  என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related Articles