Home யாழ்ப்பாணம் யாழ் . சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் முடிவு

யாழ் . சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் முடிவு

by ilankai

யாழ் . சிறையில் கைதிகளிடையே வாக்குவாதம் – சுடுநீர் வீச்சில் முடிவு

யாழ்ப்பாண சிறைச்சாலையில் இரு கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சுடுநீர் வீச்சில் முடிவடைந்துள்ளது. 

சிறைச்சாலையில் நேற்றைய தினம் புதன்கிழமை கைதிகள் இருவருக்கு இடையில் சிறைச்சாலை சமையல் கூடத்தில் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

அதனை அடுத்து ஒரு கைதி மற்றைய கைதி மீது கொதிநீரை வீசியுள்ளார். கொதிநீர் வீச்சுக்கு உள்ளனானவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொதிநீரை வீசிய கைதி தொடர்பில் சிறைச்சாலை நிர்வாகம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் . பொலிஸார் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது. 

Related Articles