உள்ளுராட்சி சபை தேர்தலில் வடகிழக்கை சுருட்டிக்கொள்ள ஆளும் அனுர அரசு முனைப்புகாண்பித்தே வருகின்றது.
அதற்கேதுவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாளை மறுதினம் 17 ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யாழ் விஜயத்தின் போது நல்லூர் – கிட்டுப்பூங்காவில் மக்கள் சந்திப்பொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்கியுள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடும் நோக்கிலேயே ஜனாதிபதியின் வருகை அமையவுள்ளது.
அத்துடன் அடுத்து வரும் நாட்களில் ரில்வின் சில்வா உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் முக்கிய பிரமுகர்களும் வடக்குக்கு படையெடுத்து தீவிர பரப்புரைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோர் அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து பிரசாரங்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.