கரைச்சி பிரதேச சபை உட்பட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அனைத்து வேட்பு மனுக்களையும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ளுமாறு உரிய தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை மீள பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்பு மனுக்களுடன் சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களில் உள்ள குறைபாடுகளை வைத்து வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் ரீட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 37 வேட்புமனுக்களை ஏற்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிடடிருந்தது.
இதனிடையே நீதிமன்ற உத்தரவு தாமத்தினால் தபால் மூல வாக்களிப்பு தாமதமடையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.