இன்று வியாழக்கிழமை அபுதாபியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொண்டன. இதன் மூலம் அமெரிக்க-ரஷ்ய இரட்டை குடியுரிமை பெற்ற க்சேனியா கரேலினா, யேர்மன்-ரஷ்ய நாட்டவரான ஆர்தர் பெட்ரோவுக்கு ஈடாக ரஷ்ய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் .
இன்று வியாழக்கிழமை காலை கரேலினாவின் வழக்கறிஞர் செய்தியை உறுதிப்படுத்தினார்.
முன்னாள் பலே நடனக் கலைஞரான கரேலினா, உக்ரைனுக்கு பயனளிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு சுமார் $50 (€45.30) நன்கொடை அளித்ததற்காக ஆகஸ்ட் 2024 இல் தேசத்துரோகக் குற்றச்சாட்டில் 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார்.
அவர் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு குடிபெயர்ந்த பின்னர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். மேலும் குடும்பத்தைப் பார்க்க ரஷ்யா திரும்பிய பின்னர் ஜனவரி 2024 இல் கைது செய்யப்பட்டார்.
ஜனவரி மாதம் டிரம்ப் பதவியேற்ற பின்னர், அவரது விடுதலை அமெரிக்கா-ரஷ்யா கைதிகள் பரிமாற்றத்தில் நடைபெறும் இரண்டாவது முறையாகும்.