விதி வலியதென்பது அனைவரிற்கும் தெரியும்.இராணுவ பாதுகாப்புடன் கவச வாகனங்களில் பயணம் செய்து கட்டைப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா கைது அச்சத்துடன் காலம் மோட்டார் சைக்கிள்களிலும் லாண்ட் மாஸ்டர்களிலும் அலைய விட்டிருக்கின்றது .
தீவகத்திற்கு செல்லும் போதெல்லாம் பல்லக்கில் செல்வதாக காட்டிக்கொண்ட டக்ளஸ் இன்று பினாமியான தம்பியார் தயானந்தா கூட கைவிட்ட நிலையில் திரிவது விதியே என்கிறன பாதிக்கப்பட்ட குடும்பங்கள்.
சம நேரத்தில் டக்ளஸ் தேவானந்தாவை நியாயம் செய்து அவரிடம் பலன் பெற்று அதற்கு பிரதியுகபாரமாக அவரை சிற்பியாக புகழ்ந்து கொண்டிருந்த படித்ததாக தம்மை தாமே சொல்லிக்கொண்ட பெருமக்கள் சிலர் ஜேவிபி பக்கம் தாவி அனுரா குமார திஸாநாயக்கவை தேச தந்தையாக புகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என முன்னாள் விரிவுரையாளர் ஒருவர் கருத்து முன்வைத்துள்ளார்.