அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகளை செய்கின்றது” என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பங்காளிகளான இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்;ளது
யாழ். ஊடக அமையத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் யாழ். மாவட்ட செயலளர் செ.சிவசுதன் இன்று செவ்வாய்க்கிழமை ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடுகையில் இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளுடன் இணைந்து உழைப்பாளர் தினத்தை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது
ஆசிரியர் மற்றும் அத்துறைசார் தரப்பினரது ஊதியம் அதிகரிப்பு, கல்வித்துறையில் அரசியல் தலையீடு இருக்க கூடாது, மக்களின் காணி நிலங்கள் விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மேதின பேரணியானது வரும் முதலாம் திகதி முற்பகல் இடம்பெறவுள்ளது.
யாழ். மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள மேதினப் பேரணியானது யாழ். நகரின் பிரதான சாலைகளூடாக பேரணியாக சென்று யாழ். பொது நூலகம் முன்பாக ஒன்று கூடி பேரணிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தேர்தல் காலத்தை முன்னிறுத்திய மக்கள் ஒன்று திரள்வதை அனுர அரசு தடுத்து வருகின்றது.
இந்நிலையில் மேதின நிகழ்வுகளிற்கு தடை விதிக்கப்படலாமென பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.