தேர்தல் கால அறிவிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறந்த அனுர அரசு தற்போது பேருந்து சேவைகளை பிரச்சாரங்களுடன் ஆரம்பித்துள்ளது.
அவ்வகையில் 35 வருடங்களின் பின்னர் காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை (29) இன்று ஆரம்பித்து வைக்கப்படடுள்ளது.
யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாக பேணப்பட்ட பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் தொடர்கின்றது.
அதன் காரணமாக பயணிகள் சேவை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட பலாலி வீதியிலேயே இன்றைய தினம் பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா, இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக புரசிங்க, மற்றும் போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எனினும் தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையிலான பரப்புரைகளை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்துவருகின்ற போதும் தேர்தல் கண்காணிப்புக்குழு மௌனம் காப்பதாக குற்றச்சாட்டுக்களை ஏனைய தரப்புக்கள் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.