Home இலங்கை மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்

மாகாண சபைத் தேர்தலை நடத்த காத்திருக்கிறோம்

by ilankai

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை பாராளுமன்றம் செய்து தரவேண்டும். நாம் இதற்காக தொடர்ந்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்பிரமணியம் அச்சுதன் தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றிற்கு அவர் மேலும் தெரிவித்ததாவது 

முன்னாள் எம்.பி. சுமந்திரன் கொண்டுவந்த தனிநபர் பிரேரணை போன்ற ஒன்றை தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொண்டு வந்து அதனை நிறைவேற்றினால் பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முறையும் மாறி மாறி வருகின்ற அரசாங்கங்களிடம் இது தொடர்பான சட்ட ஏற்பாட்டை செய்து தருமாறு நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம். 

ஒன்று எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லது பழைய முறைமையில் தேர்தலை நடத்துவதற்கு ஒரு பிரேரணையை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுங்கள்.

கடந்த 2014ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் இன்னும் நடத்தப்படவில்லை. மாகாண சபைகளின் காலம் முடிவடைந்தாலும் தேர்தல்கள் நடத்தப்படாமல் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாடு என தெரிவித்தார். 

Related Articles