2
யாழில். காய்ச்சலால் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 26ஆம் திகதி கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்