Home இலங்கை மௌலானா தயார்!

மௌலானா தயார்!

by ilankai

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள்  தொடர்பில் இலங்கை குற்றப்புலனாய்வுப்பிரிவினரிடம் வாக்குமூலமளிக்க அசாத் மௌலானா பச்சைக்கொடி காட்டியிருப்பதாக தெரியவருகின்றது.

தனக்கான பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் வாக்குமூலமளிக்கத் தயாராக இருப்பதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் உள்ள ‘உளவுத்துறை’ என்று அழைக்கப்படும் ஆயுதமேந்திய உளவு சேவைகளுடனான இரகசிய தொடர்பு குறித்த ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலினில் அசாத் மௌலானா தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் குற்றப்புலனாய்வு பிரிவினர் அவர் வெளிப்படுத்திய தகவல்கள் குறித்து வாக்குமூலம் பெற முற்பட்டுள்ளனர்.

அசாத் மௌலானா, பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றியிருந்தார். தற்போது கட்சி தலைவர் பிள்ளையான் தடுப்பு காவலில் உள்ளார்.

எனினும் உயிருக்கு அஞ்சி அசாத் மௌலானா தற்போது அரசியல் பாதுகாப்பில் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இலங்கை குற்றப்புலனாய்வுக் குழுவிற்கும் ஆசாத் மௌலானாவுக்கும் இடையே சில கருத்துப் பரிமாற்றங்கள் நடந்ததை தொடர்ந்து ஆசாத் மௌலானாவின் உயிருக்குப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இரு தரப்பினரும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிபந்தனைகள் பிரகாரம் சேனல் 4 அறிக்கை நிகழ்ச்சியில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் முன் வெளியிடப்படவுள்ள அறிக்கை குறித்து ஆசாத் மௌலானா வாக்குமூலமளிக்கவுள்ளார்.

Related Articles