பிரான்ஸ் மசூதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்திற்குப் பின்னர் காவல்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மான்ட்பெல்லியருக்கு வடக்கே உள்ள லா கிராண்ட்-கோம்ப் கிராமத்தில் உள்ள கட்டிடத்தில், 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் வழிபாட்டாளரை டஜன் கணக்கான முறை கத்தியால் குத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலாளி பல தடவை கத்தியால் குத்தியதை செல்பேசியில் காணொளி எடுத்துள்ளார் எனக் கூறுப்படுகிறது.
சந்தேகநபரைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
வெள்ளிக்கிழமை நடந்த கொலை ஒரு இஸ்லாமிய வெறுப்பு குற்றமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகிறார்கள்.
மசூதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் தாக்குதலைப் படம்பிடித்தன, இது தாக்குதல் நடத்தியவரும் பாதிக்கப்பட்டவரும் மசூதியில் தனியாக இருப்பதைக் காட்டியது.
தெற்கு பிரான்சில் உள்ள ஒரு மசூதியில் ஒரு வழிபாட்டாளர் கத்தியால் குத்தப்பட்டதை “இஸ்லாமிய வெறுப்பு அட்டூழியமாக” பிரதமர் பிரான்சுவா பேய்ரூ விவரித்தார்.
பாதிக்கப்பட்டவர் மசூதியில் வழக்கமாக வழிபடுபவர் என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்தன. அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மாலியில் இருந்து வந்ததாகவும், கிராமத்தில் “மிகவும் பிரபலமானவர்” என்றும், மிகவும் மதிக்கப்படுபவர் என்றும் மக்கள் ஏஎவ்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.
கொலையாளியை இதற்கு முன்பு அங்கு பார்த்ததில்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சனிக்கிழமை நிலவரப்படி சந்தேக நபர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக பிராந்திய வழக்கறிஞர் அப்தெல்கிரிம் கிரினி ஏஎவ்.பி யிடம் தெரிவித்தார்.
இந்தக் கொலையை இஸ்லாமிய வெறுப்பு குற்றமாக விவரிக்கும் கிரினி, பிரெஞ்சு பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதா இல்லையா என்பது குறித்து பரிசீலித்து வருவதாகக் கூறினார்.
சந்தேக நபர் போஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு முஸ்லிம் அல்ல என்றும் மற்றொரு வட்டாரம் சந்தேக நபர் போஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பிரெஞ்சு குடிமகன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர் ஒரு முஸ்லிம் அல்ல என்றும் மற்றொரு வட்டாரம் ஏஎவ்பி இடம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் போது, அந்த நபர் அல்லாஹ்வை அவமதித்து கத்தினார் என்று கூறப்படுகிறது. ஏஎவ்பி இடம் தெரிவித்துள்ளது.
தாக்குதலின் போது, அந்த நபர் அல்லாஹ்வை அவமதித்து கத்தினார் என்று கூறப்படுகிறது.