Home இலங்கை ரணில், சஜித் நாட்டின் ஜனாதிபதியாவது அவர்களது நிறைவேறாத கனவாகும்

ரணில், சஜித் நாட்டின் ஜனாதிபதியாவது அவர்களது நிறைவேறாத கனவாகும்

by ilankai

வாய்ப்பு கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன. ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டுமென நினைத்தால் அது அவர்களது நிறைவேறாத கனவாகும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

வலல்லாவிட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இவ்வாண்டு டிசம்பரில் சஜித் பிரேமதாச ஜனாதிபதியாவார் என கபீர் ஹசீம் கூறுகின்றார். இவ்வாண்டு தேர்தலொன்று இல்லாத நிலையில் அவர் எவ்வாறு இந்த கருத்தினை வெளியிட்டார்? வாய்ப்பொன்று கிடைத்தால் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். 

மக்கள் எமக்கு 5 ஆண்டுகளுக்கான ஆணையை வழங்கியிருக்கின்றனர். அதில் இன்னும் ஒரு ஆண்டு கூட நிறைவடையவில்லை.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கு மாத்திரமின்றி, அதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும் மக்கள் எமக்கு வாக்களிப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே ரணில், சஜித் இந்நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும் என்று எண்ணினால் அது அவர்களது நிறைவேறாத கனவாகவே இருக்கும். 

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு ஓடிய பின்னர் ரணில் ஜனாதிபதியானார். அவ்வாறான சம்பவம் மீண்டும் மீண்டும் இடம்பெறும் என்று இவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இது மிகவும் முட்டாள் தனமான எதிர்பார்ப்பாகும். என்றார். 

Related Articles