4
வடக்கில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியக் கட்சியில் வருவதற்கு தமிழரசு கட்சியே காரணம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எப் அமைப்பின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
இன்று வட மாகாணத்தில் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசிய மக்கள் சக்தியில் வருவதற்கு காரணம் தமிழரசு கட்சியே ஆகும். அவர்களின் செயற்பாடு தான் இன்று ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டு வந்துள்ளது.
இத்தனை ஆயிரம் போராளிகளையும், மக்களையும் இழந்து விட்டு இன்று தேசிய கட்சி ஒன்றின் பின்னால் செல்ல முடியாது. அவ்வாறு இருக்குமாக இருந்தால் எமது போராட்டம் வீணானதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.