Home வவுனியா சடலத்தை அடையாளம் காண கோரிக்கை!

சடலத்தை அடையாளம் காண கோரிக்கை!

by ilankai

வவுனியா, நெளுக்குளம் – நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் குளத்தில் மீட்கப்பட்ட சடலத்தை அடையாளம் காண உதவுமாறு இன்று (27.04) நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார்.  

வவுனியா- இராசேந்திரகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட நெளுக்குளம்- நேரியகுளம் வீதியில் உள்ள தம்பனை புளியங்குளம் பகுதியில் இருந்து கடந்த முதலாம் திகதி சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. குறித்த சடலம் 40 வயதிற்கு மேற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மரணமடைந்து 10 – 15 நாட்களுக்கு பின்னரே குறித்த சடலம் மீட்கப்பட்டிருந்தது. 

நீல கலர் கோடு போட்ட சேட்டு அவரது சடலத்தில் அருகில் கண்டு பிடிக்கப்பட்டது. உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதால் சடலத்தை பற்றிய மேலதிக அடையாளங்களை பெற முடியவில்லை. வவுனியா வைத்தியசாலையில் உள்ள பிரேத அறை குளிரூட்டி இயங்காமையால் முல்லைத்தீவு வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. 

Related Articles