சூரிய ஒளியை கைகளால் மறைக்க முடியாது என்பதை இனியாவது சிங்கள பேரினவாதிகள் உணர்ந்து கொள்ள வேண்டுமென மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்..
.மகாவம்சத்தை இலங்கையின் வரலாற்றை கூறும் நூல் என்று யுனெஸ்கோவுக்கு அனுப்பி யுனெஸ்கோ பதிவேட்டில் இடம்பெறச்செய்த சிங்கள பேரினவாதிகள் விஜயன் இலங்கையிலிருந்த ஐந்து சிவாலயங்களை புனரமைத்தான் என்பதையோ இலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே என்பதையோ ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
இப்போது இலங்கையும் சீனாவும் இணைந்து காலியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றை யுனெஸ்கோவுக்கு அனுப்பி அதனை யுனெஸ்கோ தனது சான்றுப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.யுனெஸ்கோவின் உயர்மட்ட குழு இதனை அங்கீகரித்துள்ளது.
பிரித்தானியர் இலங்கையை கைப்பற்றும் வரை தமிழே இலங்கையின் ஆட்சி மொழியாக இருந்தது என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
கண்டி பிரதானிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் செய்து கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டி ஒப்பந்தமே இதற்குச்சான்று.. கண்டி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட சிங்கள பிரதானிகள் ஏழு பேர் (சிறுபான்மையினருக்கு இருந்த அற்ப சொற்ப உரிமைகளையும் நீக்கி இலங்கையை குடியரசாக பிரகடனப்படுத்திய ஸ்ரீமாவோ அம்மையார், யாழ்ப்பாணத்தை புலிகளிடமிருந்து கைப்பற்றி சிங்கக்கொடி நாட்டிய பாதுகாப்பு அமைச்சர் அநுருத்த ரத்வத்தை ஆகியோரின் கொள்ளுப்பேரனான ரத்வத்தை திசாவை உட்பட ) தமிழிலேயே ஓப்பமிட்டுள்ளனர். இந்த கண்டி ஒப்பந்தம் சில வருடங்களுக்கு முன்னர் சுவடிகள் காப்பக பணிப்பாளராக கடமையாற்றிய பெண்மணியால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. கண்டி ஒப்பந்தத்தில் ஒப்பமிட்டவர்களின் கையொப்பங்கள் யாவும் ஸ்கான் செய்யப்பட்டு இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இனி இலங்கையும்சீனாவும் இணைந்து சமர்ப்பித்த ஆவணத்தைப்பற்றிப்பார்ப்போம்
1873 ம் ஆண்டு பாணந்துறையில் இடம்பெற்ற மதரீதியான விவாதம் அல்லது பட்டிமன்றத்தின் பிரதியே இலங்கையால் வழங்கப்பட்டுள்ளது.
மையால் எழுதப்பட்டுள்ள இந்த ஆவணம் ..27 1/2 பக்கங்களில் அமைந்த்துள்ளது.
19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பாணந்துறை ரன்கொட் விகாரையில் கிறிஸ்தவ பௌத்த குருமாருக்கிடையே இடம்பெற்ற திறந்த விவாதம் இந்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.இரு மதங்களுக்குமிடையிலான புரிந்துணர்வு, நல்லிணக்கம், ஆன்மீக மற்றும் கலாசார விடயங்கள் என்பன இந்த ஆவணத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.பின்னாளில் இந்த ஆவணத்தின் ஆங்கில மொழி பெயர்ப்பு அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு புத்த மதத்தை பாடசாலைகளில் முன்மாதிரியான சமயமாக போதிப்பதற்கு வழி வகுத்தது.இது இலங்கை சமர்ப்பித்த ஆவணத்தின் பிரதி.
சீனா சமர்ப்பித்த ஆவணம் தமிழ்,பாரசீகம்,சீன மொழி ஆகியவற்றில் எழுதப்பட்டுள்ளது.1409ம் ஆண்டு பெப்ரவரி 15ம் திகதி சீன கடற்படைத்தளபதி செங்ஹீ காலி துறைமுகத்திற்கு விஜயம் செய்த கல்வெட்டை அடிப்படையாகக்கொண்டு சீனாவின் ஆவணம் அமைந்துள்ளது.செங்கின் மூன்றாவது இலங்கை விஜயத்தை இந்த கல்வெட்டு குறிக்கிறது.சீனாவின் நன்ஜிங்கின் துறைமுகத்திலிருந்து மலைக்கோட்டை விகாரைக்கு ( mountain temple) அன்பளிப்புகள் எடுத்து வந்ததை இந்த கல்வெட்டு குறிக்கிறது. இந்த கல்வெட்டில் புத்தர்,விஷ்ணு,அல்லா ஆகியோர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. 1911ம் ஆண்டு தொமிலன் என்ற பிரிட்டிஷ் பொறியியலாளர் இதனை கண்டெடுத்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் உள்ள.இந்த கல்வெட்டு காலி அருங்காட்சியகத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த கல்வெட்டில் ஸ்ரீலங்காவின் தேசிய மொழியான சிங்களம் இடம்பெறவில்லை. . இதிலிருந்து தெளிவாகத்தெரிகிற விடயம் என்னவென்றால் 1409ம் ஆண்டில் காலியில் தமிழே அரச கரும மொழியாக இருந்துள்ளது. அங்கு வாழ்ந்த பௌத்தர்கள் சிலவேளை சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்களின் ஆட்சியே காலியில் நடைபெற்றுள்ளது என்பதற்கு இந்த கல்வெட்டே சான்று பகர்கிறது.
இப்போது சிங்களவர்கள் இந்த கல்வெட்டில் ஏன் சிங்களம் இடம்பெறவில்லை என்று தலையைப்பிய்த்துக்கொண்டு ஆராய்ந்து வருகின்றனர்.
ரவீந்திர விஜேகுணவர்தன என்ற கடற்படைத்தளபதி ஐலண்ட் பத்திரிகையில் Why Sinhala omitted in Famous stone inscription by ancient Chinese Admiral? என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வரைந்துள்ளார்.சிங்களவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலி துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டில் சிங்களம் இடம்பெறாதமை குறித்து சிங்களவர்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளதாகவும் இந்த சுவாரஸ்யமான விடயம் பற்றி நங்கள் கலந்துரையாட வேண்டுமெனவும் ரவீந்திர விஜேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.நான் வரலாற்று ஆய்வாளன் அல்ல எனவும் நான் ஒரு கடலோடி எனவும் ரவீந்திர விஜேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
இந்த கட்டுரையில் செங்ஹீ பிறப்பால் முஸ்லிம் எனவும் 1371ம் ஆண்டு பிறந்த செங்ஹீ 62 வயதில் இந்தியாவின் கோழிக்கூட்டில் ஆங்கிலத்தில்(Kozhikode) என உள்ளது இறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.போர்த்துக்கீசர் இந்தியாவை கைப்பற்ற முன்னரே செங்ஹீ இலங்கைக்கு விஜயம் செய்ததாகவும், தனது வர்த்தகத்தை திறம்பட நடத்தும் நோக்குடன் புத்தர்,விஷ்ணு,அல்லா போன்றவர்களின் ஆசியை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த கல்வெட்டு வரையப்பட்டிருக்கலாம் என ரவீந்திர விஜேகுணவர்தன ஊகிக்கிறார்.
இந்த கல்வெட்டில் சிங்களம் இடம்பெறாதமைக்கான காரணத்தையும் கூறுகிறார் ரவீந்திர விஜேகுணவர்தன.
செங்ஹீ 1405ம் ஆண்டு முதல் தடவை இலங்கைக்கு விஜயம் செய்த போது பேருவளை துறைமுகத்தில் தரித்து நின்று சிவனொளிபாதமலையை தரிசித்ததாகவும், .
அட்மிரல் செங் ஹீயின் கடற்படை நம்பமுடியாத அளவிற்கு பெரியதாக இருந்ததாகவும்,. 120 மீற்றருக்கும் கூடுதலான நீளமான பாய்மரக் கப்பல்கள் இருந்ததாகவும் இலங்கை கடற்படையிடம் உள்ள கப்பல்களை விட நீளமானவை ( இலங்கை கடற்படையிடம் தற்போதுஉள்ள கப்பலின் நீளம் 115 மீற்றர் மட்டுமே) கடற்படையின் எல்லா கப்பல்களும் ஐந்து தளங்களைக் கொண்டிருந்ததாகவும் . கப்பலின் மேல் தளங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதாகவும்., கீழ் தளங்களில் பன்றி வளர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பயணத்தின் போது பணியாளர்கள் எஞ்சிய உணவை பன்றிகளுக்கு வழங்குவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிப்பதாக ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவிக்கிறார்.. இந்தக் கப்பல்கள் மிதக்கும் கோட்டைகளாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
இவ்வாறான நூற்றுக்கு மேற்பட்ட கப்பல்கள் மற்றும் சிறிய கப்பல்கள் சீன கடற்படையிடம் இருந்தன,. சீன கடற்படையில் 217 கப்பல்கள் மற்றும் 28,000 மாலுமிகள்/கடற்படை வீரர்கள் இருந்தனர். 1492 இல் கொலம்பஸிடம் மூன்று கப்பல்களும் 90 மாலுமிகளுமே இருந்தனர். கொலம்பஸின் கொடியான “சாந்த மரியாவின் நீளம் 30 மீற்றர் மட்டுமே
அட்மிரல் செங் ஹீயின் பெரிய கப்பல்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்வதற்காக பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், பீங்கான் குவளைகள் மற்றும் தட்டுகள் போன்ற பெறுமதியான பொருட்களை எடுத்துச்சென்றதாக ரவீந்திர விஜேகுணவர்தன தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
1411ம் ஆண்டு செங்ஹீ இரண்டாவது தடவை விஜயம் செய்த போது ஆறாம் பராக்கிரமபாகுவுக்குப்பின்னர் கோட்டையை ஆட்சி செய்து வந்த அழகேஸ்வர என்ற சிங்கள அரசன் செங்ஹீயின் கப்பல் மீது தாக்குதல் தொடுத்து கப்பலை கைப்பற்ற முற்பட்டதாகவும் செங்ஹீ தாக்குதலை முறியடித்து அழகேஸ்வர(னை) வை கைது செய்து சீனாவுக்கு கொண்டு சென்றதாகவும் ரவீந்திர விஜேகுணவர்தன தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்று பதிவுகளின்படி, அட்மிரல் செங்ஹீ சிறைபிடிக்கப்பட்ட மன்னர் அழகேஸ்வரரையும் அவரது ஆதரவாளர்களையும் யோங்லே பேரரசரிடம் (மிங் வம்சத்தின் மூன்றாவது பேரரசர்) ஒப்படைத்தார், ஆனால் சீனர்கள் தமது வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காகவே கடல் பயணங்களை மேற்கொண்டதாகவும், போர் புரிவதற்காக அல்ல எனவும் தெரிவித்த அரசன் சிறைபிடிக்கப்பட்டவர்களை தனது அடுத்த பயணத்தின்போது இலங்கைக்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டதாகவும் சீன பேரரசரின் உத்தரவின்படி, அட்மிரல் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்ததாகவும் . சீனாவில் அவர்கள் தங்கியிருந்த காலத்தில் அவர்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டதாகவும் ரவீந்திர விஜேகுணவர்தன தெரிவிக்கிறார்
ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு ஒன்று புரியவில்லை பெயரைப்பார்க்கவே தெட்டத்தெளிவாகத்தெரிகிறது காலியில் அழகேஸ்வரன் என்ற தமிழரசனின் ஆட்சியே அப்போது நடைபெற்றுள்ளது. அழகேஸ்வரனை சிங்களவர்கள் சிங்களவர்கள் அழகேஸ்வர ( தேவனை நம்பிய தீசனை தேவநம்பியதிஸ்ஸ என அழைத்தது போல்) என்று அழைத்திருக்கலாம்.
இலங்கையின் வரலாற்றை திரித்து எழுதி இலங்கை முழுவதையும் சிங்கள மயமாக்க முயற்சிக்கும் சிங்கள வரலாற்றாசிரியர்களும், பிக்குமாரும், அரசியல்வாதிகளும் இனி என்ன சொல்லப்போகின்றனர்.தமிழர்களை கள்ளத்தோணிகள் என்றும், ஒல்லாந்தர் காலத்தில் புகையிலை தோட்டங்களில் வேலை செய்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து ஒல்லாந்தர்களால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் எழுதும் சிங்கள வரலாற்றாசிரியர்களும் இனியாவது இலங்கையின் பூர்வீகக்குடிகள் தமிழர்கள் தான் என்பதை ஏற்றுக்கொள்வார்களா?.
ரவீந்திர விஜேகுணவர்தன பாகிஸ்தானுக்கான இலங்கை தூதுவராகவும்,திருகோணமலை எண்ணெய் குத பணிப்பாளராகவும், பெற்றோலிய கூட்டுத்தாபன முகாமைத்துவ பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளாரென மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.