5
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்த்தை நிறுத்துமாறு கோரிய நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொட்டடி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பிரச்சார கூட்டத்தினை நிறுத்தி விட்டு , தேசிய மக்கள் சக்தியினரை வெளியேற கோரிய நபரை , கூட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முனைந்தார் எனும் குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பிரச்சார கூட்டத்தில் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.