Home யாழ்ப்பாணம் திக்கம் வடிசாலை:டக்ளஸிற்கு தெரியாது?

திக்கம் வடிசாலை:டக்ளஸிற்கு தெரியாது?

by ilankai

டக்ளஸினால் சிங்கள நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டிருந்த திக்கம் வடிசாலை மீண்டும் வடமராட்சி பனை தென்னை வள அமைப்பிடம் 25வருடங்களின் பின்னராக மீள கையளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே திக்கம் வடிசாலை தொடர்பாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் சிறீகாந் பன்னீர்செல்வம், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாவும் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் தொடர்நதும் கருத்து தெரிவிக்கையில்,

திக்கம் வடிசாலையை வெளிநாட்டு தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கான ஒப்பந்தத்துடன் எமது செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களையும் சம்மந்தப்படுததும் வகையில் சில ஊடகங்களி்ல் செய்தி வெளியாகியுள்ளது.

உண்மையில் பனை அபிவிருத்தி சபையுடன் சம்ந்தப்பட்டவர்களினால் அவ்வாறான தகவல் வெளிப்படுத்தப்பட்டிருப்பின், அதில் எந்தவித உண்மைளும் இல்லை என்பதை பொறுப்புடன் கூறவிரும்புகின்றோம்.

உண்மையில், கடந்த அரசாங்க காலத்தில் கைத்தொழில் சார்ந்த துறைசார் அமைச்சிற்கும் குறித்த வெளிநாட்டு நிறுவனத்திற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுத்து வைத்திருந்ததே எமது செயலாளர் நாயகம் அவர்கள்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles