6
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆனையிறவு உப்பு விடயத்தில் பெயரை பார்க்க வேண்டாம். சுவையை பாருங்கள் எனக் கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் அல்லது சுந்தரலிங்கம் என பெயரை வையுங்கள்.அதை விடுத்து விமல் வீரவன்ச என்றோ அல்லது பிமல் ரத்நாயக்க என்றோ பெயர் வைக்க வேண்டாமென சத்தியலிங்கம் ஆலோசனை வழங்கியுள்ளார்.