கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்ட மீனவ சங்க தலைவரை நேரடியாக சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் அடாவடித்தனங்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் கடந்த 24ஆம் திகதி தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீவு – கேப்பாப்புலவுப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கேப்பாப்புலவு மீனவசங்கத் தலைவர் செபஸ்ரியாம்பிள்ளை சுகிர்தன் கடற்றொழில் அமைச்சரின் சாரதியால் தாக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இவ்வாறு தாக்கப்பட்ட கேப்பாப்புலவு மீனவசங்கத்தலைவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்றைய தினம் சனிக்கிழமை நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
இதன்போது கடற்றொழில் அமைச்சரும் அவருடைய சகாக்களும் மக்களோடு எவ்வாறு அணுகுவது என்பதை முதலில் அறிந்துகொள்ளவேண்டுமெனவும், இவ்வாறான அடாவடிச் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிகமகமுடியாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.