Home யாழ்ப்பாணம் வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

வவுனியாவில் 5 உணவகங்களுக்கு சீல் – பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் தண்டம்

by ilankai

வவுனியாவில் உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , காலாவதியான பொருட்களை விற்பனை செய்த பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. 

வவுனியா தெற்கு இரட்டைபெரியகுளம் பகுதியில், புத்தாண்டு தினத்தன்று அப்பகுதி பொது சுகாதார பரிசோதகரால் , உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் என்பவை திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. 

அதன் போது உடல்நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட 05 உணவகங்கள் மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பல்பொருள் அங்காடி என்பவை கண்டறியப்பட்டு , அவற்றின் உரிமையாளருக்கு எதிராக வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. 

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உரிமையாளர்கள் தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து , உடல் நலத்திற்கு ஒவ்வாத வகையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்ட உணவகங்களை 14 நாட்களுக்கு சீல் வைத்து மூடுமாறும் , உணவகங்களை திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் உணவாக உரிமையாளர்களுக்கு மன்று கட்டளையிட்டது. 

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த , பல்பொருள் அங்காடி உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது. 

Related Articles