Home இலங்கை புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க பாடுபடுகிறார்களாம்

புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க பாடுபடுகிறார்களாம்

by ilankai

தேசிய மக்கள் சக்தியை வெற்றிகொள்ள வேண்டுமானால், மோசடி மற்றும் ஊழலை நிறுத்திக்காட்டுங்கள் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய, உடுதும்பர, ஹசலக, குண்டசாலை, மடவளை ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்ததாவது, 

வேறு ஒரு யுகத்திற்கு இந்த நாட்டை கொண்டு செல்வதற்குத் தேவையான திட்டத்தை அரசாங்கம் தயாரித்து, முகாமைத்துவம் செய்து, செயற்படுத்தி வருகிறது. 

நாடு எப்படிப்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். நாட்டின் பொருளாதாரம் இன்று ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டியுள்ளது. ஊழல் மற்றும் வீண்விரயம் ஒழிக்கப்பட்டுள்ளது. 

எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாத வகையில் மிகவும் கவனமாக செயற்பட்டு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க நாங்கள் பாடுபட்டு வருவதாக பிரதமர் தெரிவித்தார்.

Related Articles