Home தமிழ்நாடு 34 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய மாலுமி சிவத்தம்பி!

34 வருடங்களின் பின்னர் வீடு திரும்பிய மாலுமி சிவத்தம்பி!

by ilankai

தமிழக சிறைகளில் கடந்த 34வருடங்களாக அடைக்கப்பட்டிருந்த மாலுமி சிவதம்பி நீண்ட நெடிய போராட்டங்களுக்குப் பின் இன்று தாயகம் வந்தடைந்துள்ளார்.  கடந்த 1991இல் சர்வதேச கடல் பகுதியில் வைத்து இந்திய கடற்படையால் வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்ட கப்பலில் இருந்த சிவத்தம்பி  உள்ளிட்டவர்கள் மீது தடா வழக்கு போடப்பட்டது. அந்த வழக்கில்   சிறையிலும், விடுதலையாகி சிறப்பு முகாமிலும் இருந்தவர். கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னையில் தங்கியிருந்தார்.

இதனிடையே சிவத்தம்பி  தாயகம் திரும்புவதற்காக உறுதுணையாக இருந்த இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் வேல்முருகன்,  அல்தாப், தாமரை, மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சட்டத்தரணி புகழேந்தி.

Related Articles