3
யாழ்ப்பாணத்தில் மோசடி வழக்கில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவர் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாண விசேட குற்ற விசாரணை பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு எதிராகவே முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்ணொருவரே , பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் இலஞ்சம் கோரியதாக முறைப்பாடு செய்துள்ளார்.