Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாக மாவட்ட செயலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
யாழ்பாண மாவட்டத்தில் 21,064 பேர் அஞ்சல் மூலம் வாக்களித்கத் தகுதிபெற்றுள்ளனர். அவர்களுக்காக யாழ்ப்பாணத்தில் 292 அஞ்சல் மூல வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
நாளைய தினம் வெள்ளிக்கிழமையும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெற உள்ளது
இன்றும் மற்றும் நாளைய தினம் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தவறியவர்களுக்கான இறுதிச் சந்தர்ப்பமாக எதிரவரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு தினங்களிலும் வாக்களிக்க முடியும் என மாவட்ட செயலக ஊடக பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.