Home இலங்கை கண்டிக்கு செல்ல வேண்டாம்

கண்டிக்கு செல்ல வேண்டாம்

by ilankai

கண்டிக்கு செல்ல வேண்டாம்

மறு அறிவித்தல் வரும் வரை கண்டி நகரத்திற்கு வருகை தருவதைத் தவிர்க்குமாறு கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த அனைத்து குடிமக்களையும் கோரியுள்ளார். 

விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக கண்டியில் ஏற்கனவே 300,000க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் கூடியிருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். 

யாத்ரீகர்கள் தொடர்ந்து கண்டி நகருக்குள் நுழைந்தால் சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் கண்டி மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார் 

Related Articles