Home இலங்கை பெண்ணை படுகொலை செய்து , பயணப்பைக்குள் சடலத்தை எடுத்து சென்றவருக்கு மரண தண்டனை

பெண்ணை படுகொலை செய்து , பயணப்பைக்குள் சடலத்தை எடுத்து சென்றவருக்கு மரண தண்டனை

by ilankai

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் பெண்ணொருவரை கொலை செய்து, அவரது உடலை ஒரு பயணப் பைக்குள் அடைத்து, பின்னர் கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் வைத்துச் சென்றிருந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 

2015 ஆம் ஆண்டு கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள ஒரு விடுதியில் தர்மராஜா கார்த்திகா என்ற பெண்ணை கொலை செய்து, அவரது உடலை பயணப் பைக்குள் அடைத்து கொழும்பு பெஸ்டியன் வீதியில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றில் வைத்துச் சென்றிருந்த சம்பவம் தொடர்பில் பேட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு எதிராக சட்டமா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

 குற்றம் சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Related Articles