இணைந்த வடகிழக்கை பிரித்ததும், கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியதும் ஜே.வி.பி தான் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“ஏன் நாங்கள ஜேவிபி யை வெறுக்கிறோம் என்பதைக் கூறத்தேவையில்லை அது தமிழ் மக்கள் ஆழ்மனதில் உள்ளது.
கண்மூடித்தனமான யுத்தத்திற்கு சிங்கள மக்களை தயார்படுத்தியது தான் இந்த ஜே.வி.பி. இணைந்த வடகிழக்கை பிரித்ததும் ஜே.வி.பி. தான் என கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (24) வரையில் கைது செய்யப்பட்ட மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கைது செய்யப்பட்ட மொத்த ஆதரவாளர்களின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.