முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற தென்னிலங்கை தகவல் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை தோற்றுவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மிக விரைவில் கைது செய்யப்படுவார் என்றும், அவர் முக்கிய அரசியல் பிரமுகர் என்றும் அரசு கூறிவருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிள்ளையான் அவரது சாரதியென கைதுகள் தொடர்கின்றது.
அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அந்தப் பிரதான சூத்திரதாரிக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றவே 2019 ஆம் ஆண்டில் ஒரு தரப்பால் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
எனவே, ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திதாரி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல் பிரமுகர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாக இருக்கலாம் என்று தென்னிலங்கையில் பரபரப்பு தொற்றியுள்ளது.