நாட்டில் தொடர்;ச்சியாக இடம்பெற்று வரும் கொலைகள் பாதுகாப்பு நிலைகுலைந்து மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளதென முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாட்டில் தொடர்ச்சியாக அரங்கேறும் பாதாள உலக கோஸ்டியினுடைய கொலைகள் நாட்டின் பாதுகாப்பு நிலைகுலைந்து மக்கள் அச்சம் கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதிர்யுதீன் குற்றஞ்சுமத்தியுள்ளார்.
நாட்டில் ஜேவிபி எதிர் கட்சியாக இருந்த காலத்தில் நாட்டில் இவ்வாறான கொலைகள் இடம்பெற்ற போது அதற்கு எதிராக ஆட்சியாளர்கள் மீது பேசியதைக் கண்டோம். ஆனால் புதிய அரசாங்கத்தின் வருகையின் பின் அடிக்கடி கொலைகள், பாதாள உலக கோஸ்டியினுடைய கொலைகள் அடிக்கடி நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றதெனவும் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்கள் தொடர்பில் சோதனை செய்யப்பட வேண்டும் என காவல்துறை தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் செல்லும் போதே தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்றாலும், அது சாரதி மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவரின் பாதுகாப்பிற்காக மட்டுமே.
எனவே, மோட்டார் சைக்கிளில் பயணிக்காத போது பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொள்வது கண்டறியப்பட்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் ஆய்வு செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது.