2
சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலையை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த காஞ்சிபானை இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் இடம்பெற்ற விருந்து உபசார நிகழ்வின் போது, மோட்டார் சைக்கிளில் வருகை தந்திருந்த இருவர் மேல் தளத்திற்கு சென்று துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் 06 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.