Home கிளிநொச்சி தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் சில காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

தேர்தலுக்கு முன் யாழ் மற்றும் கிளிநொச்சியில் சில காணிகளை விடுவிக்க கூடிய சாத்தியம்

by ilankai

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சில காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கேட்ட போது, மக்களின் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் மிக உறுதியாக உள்ளது. படிப்படியாக காணிகளை விடுவிப்போம். யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்புடைய காணிகள் தவிர மீதமுள்ள காணிகளை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார். 

அதேவேளை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள சுமார் 100 ஏக்கர் காணிகளை எதிர்வரும் வாரங்களில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , ஏற்கனவே மக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகளில் மக்கள் சுதந்திரமாக சென்று வர கூடிய வகையிலும் , அக்காணிகளுக்கான வீதிகளை முற்றாக விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

யாழ்ப்பாணத்தில் பருத்தித்துறை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles