தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் திட்டமிட்டு நிராகரிப்பட்ட போதும் யாழ் மாநகர சபையில் தமிழ் கட்சி ஒன்றுக்கு தமது ஆதரவு நிச்சயம் இருக்கும் என முன்னாள் யாழ்.மாநகரசபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
வருகின்ற மாதம் இலங்கையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வருகின்றது. வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் மான் சின்னத்தில் வேட்பு மனுதாக்கல் செய்த நான்கு பிரதேசங்களில் யாழ் மாநகர சபையில் ஒரு வேட்பாளர் அத்தாட்சிப்படுத்தல் பத்திரத்தில் சத்தியப்பிரமாண ஆணையாளரின் உறுதிப்படுத்தல் இன்றி நிராகரிக்கப்பட்டது.
மேலும் மூன்று சபைகளில் இளம் வேட்பாளர் போதாமை காரணமாக நிராகரிக்கப்பட்டது. அது அடிப்படை மனித உரிமைகள் மீறல் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கினை தாக்கல் செய்தோம்.
ஆனால் நீதிமன்று அதனை தள்ளுபடி செய்ததுடன் அதே காரணங்களுக்காக பிறப்பு அத்தாட்சிப்படுத்தல் பத்திரம் உறுதிப்படுத்த முடியாத காரணத்துக்காக மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுகொள்ளுமாறு ஏனைய தரப்புக்களுக்கு உத்தரவு வழங்கியது.
இலங்கை தேர்தல் திணைக்களத்தினால் ஒரு நீதிமன்று மற்றைய நீதிமன்றுக்கு முரணாக இருந்தது. சட்ட சிக்கல்களை உருவாக்கியது. வழக்கு தாக்கல் செய்பவருக்கு மாத்திரமே தீர்வு என்ற போர்வையில் காரணங்கள் இருந்தது.
ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் சொன்னது போல ஏப்ரல் 20க்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்ய கூறினார்கள்.
மேன்முறையீட்டு நீதிமன்று ஒரு தீர்வை வழங்கினால் அது அனைவருக்கும் பொருந்தும் என தெரிந்தும் எம்மை வழக்கு தாக்கல் செய்ய வைத்து நீங்கள் காலதாமதமாகி விட்டது என கூறி எதிருங்கள் என மறைமுகமாக ஜனநாயகத்தை எள்ளி நகையாடி நடைபெறும் தேர்தல் இதுவாகும்.
மாநகர சபையில் இருவருடம் செய்த சேவைகளை ஏனைய சபைகளிலும் மேற்கொள்வோம். ஏனைய கட்சிகள் தமிழ் தேசியத்துடன் இணையுமானால் நாம் எங்களுடைய ஆதரவினை ஒரு கட்சிக்கு வழங்குவோம்.” எனவும் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.