Home முதன்மைச் செய்திகள் யேர்மனியில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி!

யேர்மனியில் துப்பாக்கிச் சூடு இருவர் பலி!

by ilankai

யேர்மனியின் பிராங்போட்டிலிருந்து  வடக்கே 35 கிலோ மீற்றர் உள்ள பேட் நௌஹெய்ம் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

தாக்குதலாளியான சந்தேக நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தாக்குதலில் குடியிருப்பாளர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எந்த ஆபத்தும் இல்லை என்று ஒரு காவல்துறைச் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

குற்றத்தின் பின்னணி அல்லது சாத்தியமான நோக்கம் குறித்தும்  பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

சந்தேக நபரைத் தேடுவதற்கு ஒரு உலங்குவானூர்தி பயன்படுத்தப்பட்டது.  தேடுதல் வேட்டை தொடர்கிறது. அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களையும் சாட்சிகளையும் காவல்துறை விசாரித்து வருவதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

Related Articles