Home ஆபிரிக்கா காங்கோ படகு தீ விபத்து: 148 பேர் உயிரிழந்தனர்

காங்கோ படகு தீ விபத்து: 148 பேர் உயிரிழந்தனர்

by ilankai

வடமேற்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள காங்கோ ஆற்றில் மோட்டார் பொருத்தப்பட்ட மரப் படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இருப்பினும் படகில் சுமார் 500 பயணிகள் இருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் இருந்ததாக ஈக்வடேர் மாகாண அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

படகில் ஒருவர் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்ததும் பேரழிவு தொடங்கியது என்று நதி  ஆணையர் கோம்பியன்ட் லயோகோ கூறினார்.

காங்கோ மற்றும் ருகி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில், ஈக்வேட்டர் மாகாணத்தில் உள்ள எம்பண்டகா நகருக்கு அருகில் தீ விபத்து ஏற்பட்டது.

நீந்த முடியாமல் தண்ணீரில் குதித்ததால் பெண்கள், குழந்தைகள் உட்பட பல பயணிகள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் சிலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் பலர் இன்னும் தங்கள் அன்புக்குரியவர்களின் செய்திகளுக்காகக் காத்திருந்ததாக உள்ளூர் சிவில் சமூகத் தலைவர் ஜோசப் லோகொண்டோ தெரிவித்தார். 

கடந்த புதன்கிழமை 131 உடல்களைக் கொண்ட முதல் குழு கண்டெடுக்கப்பட்டது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேலும் 12 உடல்கள் மீட்கப்பட்டன. அவற்றில் பல கருகிவிட்டன என்று அப்பகுதியைச் சேர்ந்த தேசிய பிரதிநிதிகள் குழுவின் தலைவரான ஜோசபின்-பசிஃபிக் லோகுமு ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சில படங்கள் மற்றும் வீடியோக்கள், சிறிய படகுகளில் இருந்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போது, தீப்பிழம்புகள் மற்றும் புகையுடன் கூடிய ஒரு நீண்ட படகைக் காட்டியது.

மீட்புப் பணிகளில் உள்ளூர் அதிகாரிகளுக்கு உதவ உள்ளூர் செஞ்சிலுவைச் சங்கக் குழுக்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles