Home ஐரோப்பா இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதிகளைத் தாக்கியது புயல்!

இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரெஞ்சு ஆல்ப்ஸ் பகுதிகளைத் தாக்கியது புயல்!

by ilankai

நேற்று வெள்ளிக்கிழமை வீசிய புயல் ஐரோப்பாவின் ஆல்ப்ஸ் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இத்தாலியில் கனமழையால் மக்கள் உயிரிழந்துள்ளனர், ஈஸ்டர் விடுமுறைக்காக பயணிகள் பயணங்களை மேற்கொள்வதால் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் பனிப்புயல் காரணமாக இடையூறுகளை எதிர்கொள்கின்றன.

இத்தாலி

வடக்கு இத்தாலியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அதிக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பீட்மாண்ட், தெற்கு டைரோல் மற்றும் லோம்பார்டி பகுதிகளில்   கனமழையை பெய்து வருகிறது , இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வால்டாக்னோ நகரில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் ஒன்றில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர். 

வீடு வெள்ளத்தில் மூழ்கியதில் 92 வயது முதியவர் ஒருவர் பீட்மாண்ட் பகுதியில் இறந்து கிடந்த நிலையில் தீயணைப்பு வீரர்களினால் மீட்கப்பட்டார்.

புயல் காரணமாக பீட்மாண்ட் அவசர உதவியாக €5 மில்லியன் ($5.7 மில்லியன்) ஒதுக்கியுள்ளது.   

வெள்ள நீர் ஆஸ்டா பள்ளத்தாக்கில் மக்களை வெளியேற்றத் தூண்டியது, அங்கு 6,400 பேர் மின்சாரம் இல்லாமல் இருந்தனர். ஆஸ்டா பள்ளத்தாக்கு பிரான்சின் கிழக்கிலும் சுவிட்சர்லாந்தின் தெற்கிலும் அமைந்துள்ளது. 

பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு அச்சம் காரணமாக வடக்கு நகரமான மிலனில் உள்ள சில பூங்காக்களும் மூடப்பட்டன. வடமேற்கு நகரமான டுரினில் வசிப்பவர்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். 

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் , தெற்கு மாகாணமான வாலைஸில் உள்ள ஆல்பைன் ரிசார்ட் இடமான ஜெர்மாட்டில் , கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சாரம் மற்றும் தொலைபேசி நெட்வொர்க்குகள் துண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக ஜெர்மாட்டிற்கான சாலைகள் துண்டிக்கப்பட்டன. 

வாலைஸிலும் உள்ள சியோனில், 36,000 குடியிருப்பாளர்கள் வீட்டிலேயே தங்கி மோசமான வானிலைக்காக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பிரான்ஸ்

பிரெஞ்சு ரிசார்ட்டான  வால் தோரன்ஸில், பனிச்சரிவில் சிக்கி ஒரு பெண் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். 

இந்த வார இறுதியில் ஈஸ்டர் விடுமுறை காரணமாக ஐரோப்பியர்கள் ஓய்வு எடுக்கும்போது புயல் வீசுகிறது. தொடருந்து தாமதத்தால் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related Articles