கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் கைது செய்யப்பட்டமையால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருத்தமடைந்துள்ளார் என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“வழக்கறிஞர் உதய கம்மன்பில தனது வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு வழக்கை வாதிட நீதிமன்றத்திற்குச் சென்றதில்லை அவர் முதலில் வாதிடுவது பிள்ளையான் வழக்குக்கே.
ரணில் விக்ரமசிங்க சட்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிள்ளையானுடன் தொலைபேசியில் பேச முயற்சிக்கிறார்.
ஆனால் இப்போது நம்மிடம் இருப்பது முன்பு இருந்தது போன்ற பொலிஸ் அமைப்பு அல்ல. நாங்கள் மாறிவிட்டோம்.
அவர் முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம். ஆனால் சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.
அடுத்து, கம்மன்பில அவருக்கு உதவ முயற்சிக்கிறார். ஒரு சாதாரண நபரை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறப்பட்ட பிறகு, கம்மன்பில தான் வழக்கறிஞர் என்று கூறுகிறார்.
கிழக்கு மாகாணத்தில் எத்தனை குற்றங்கள் நடந்தன என்பது உங்களுக்குத் தெரியும்.
ஏராளமான பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பதாகப் பேச்சு நிலவுகிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும் சந்தேகங்கள் உள்ளன. இவை அனைத்தும் நடைமுறையில் இருக்கும்போது, இதுபோன்ற குற்றங்கள் குறித்து விசாரிக்கப்படும் பிள்ளையானை மீட்பதில் உதய கம்மன்பில தலைவராகிறார்.
இந்த நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட குற்றங்கள் அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள் என டில்வின் கூறியுள்ளார்.