கென்யாவில் ஆயிரக்கணக்கான உயிருள்ள எறும்புகளை கடத்தியதாக இரண்டு பெல்ஜிய இளைஞர்கள் உட்பட நான்கு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எறும்பு கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பெல்ஜிய நாட்டவர்கள், ஒரு வியட்நாமிய நாட்டவர் மற்றும் ஒரு கென்யா நாட்டவர் ஆகியோர் தனித்தனி நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் போக்குவரத்தின்போது எறுப்புகளை உயிருடன் வைத்திருக்க வடிவமைக்கப்பட்ட கொல்கலன்களில் 5,000க்கும் மேற்பட்ட எறும்புகள் அடைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நால்வரும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்கும் ஏற்றுமதி செய்ய முயன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
பெல்ஜியர்களான லோர்னாய் டேவிட் மற்றும் செப்பே லோட்விஜ்க்ஸ் ஆகிய இருவரும் 19 வயதுடையவர்கள்.
நீதிமன்ற ஆவணத்தின்படி, அதிகாரிகள் 2,244 சோதனைக் குழாய்கள் மற்றும் எறும்புகள் அடங்கிய சிரிஞ்ச்களைக் கண்டுபிடித்தனர். பயணத்தின் போது எறும்புகள் உயிர்வாழ உதவும் வகையில் கொள்கலன்களில் பருத்தி கம்பளி நிரப்பப்பட்டிருந்தது.
விசாரணைகளில், எறும்புகள் இரண்டு மாதங்கள் வரை உயிர்வாழும் வகையிலும், விமான நிலைய பாதுகாப்பு கண்டறிதலைத் தவிர்க்கும் வகையிலும் சோதனைக் குழாய்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன என்பது தெரியவந்தது.
வியட்நாமிய மற்றும் கென்ய சந்தேக நபர்கள் நைரோபியில் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் 400 எறும்புகளை வைத்திருந்தனர்.
எறுப்புகளை வேடிக்கைக்காகச் சேகரித்தோம். இச்செயல் சட்டவிரோதமானவை என்பதை உணரவில்லை. நாங்கள் எந்த சட்டங்களையும் மீற இங்கு வரவில்லை. தற்செயலாகவும் முட்டாள்தனமாகவும் நாங்கள் அதைச் செய்தோம் என டேவிட் நீதிமன்றல் நீதிபதியிடம் தெரிவித்தார்.
வழக்கானது ஏப்பல் 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட எறும்புகளில் சுமார் 1 மில்லியன் கென்ய ஷில்லிங் அல்லது சுமார் $7,800 மதிப்புள்ளவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில எறும்பு இனங்கள், குறிப்பாக ராணி எறும்புகள், சேகரிப்பாளர்களால் மதிக்கப்படுகின்றன. ராணிகள் சுமார் 20–24 மிமீ நீளம் கொண்டவை மற்றும் அழகான சிவப்பு மற்றும் பழுப்பு/கருப்பு நிறத்தைக் கொண்டுள்ளன” என்று நிறுவனம் கூறுகிறது. ஒற்றை ராணி £99.99 ($132) விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது, இருப்பினும் இந்த இனம் தற்போது கையிருப்பில் இல்லை.