தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பொிய கணவாய்முதல் முறையாக பிரம்மாண்டமான கணவாய் மீன் கடலில் படமாக்கப்பட்டது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பயணத்தின் போது மிகப்பெரிய கணவாய் மீன் (squid) கண்டுபிடிக்கப்பட்டது.
100 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய கணவாய் மீன் இனம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அதன் இயற்கை சூழலில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளுக்கு அருகில், 600 மீட்டர் (1,968 அடி) ஆழத்தில் 30 செ.மீ நீளம் (11.8 அங்குலம்) கொண்ட இந்த இளம் கணவாய் மீன் கேமராவில் பதிவாகியுள்ளது.
செக்ஸ் பல்கலைக்கழக கல்வியாளர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, மார்ச் மாதம் புதிய கடல்வாழ் உயிரினங்களைக் கண்டறியும் 35 நாள் தேடலின் போது இந்தக் காட்சிகளைப் பதிவு செய்தது.
இக்கணவாய் 7 மீற்றர் (23 அடி) நீளம் 500 கிலோ எடை வரையும் வளரக்கூடியது என நிபுணர்கள் நம்புகின்றனர். இது மிகப்பொிய முதுகெலும்பில்லாத உயிரினமாக அமைக்கின்றது.
இந்த இனத்தின் மற்றொரு தனித்துவமான அம்சம், அவற்றின் எட்டு கைகளின் நடுவில் கொக்கிகள் இருப்பது.
கடந்த ஜனவரி மாதத்தில், முதன்முறையாக ஒரு பளிங்குக் கண்ணாடி கணவாய் மீனின் காட்சிகளைப் படம்பிடித்ததாகவும் விஞ்ஞானிகள் வெளிப்படுத்தினர்.
ஆராய்ச்சியாளர்கள் முதல் முறையாக ஒரு பளிங்குக் கண்ணாடி கணவாயைப் படம்பிடித்துள்ளனர்