9
ஸ்பெயினின் தெற்கு மாகாணமான கிரனாடாவில் உள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் சட்டவிரோத நிலத்தடி துப்பாக்கிச் சூடு தளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தும் மூன்று தளங்களை அங்கே அமைந்திருந்தன. துப்பாக்கிச்சூடு நடத்தும் தளத்தின் ஆழம் காரணமாக அருகில் உள்ள வீட்டு நபர்களால் துப்பாக்கிச் சூட்டுச் சத்தத்தை செவிமடுக்கமுடியவில்லை.
இந்த நடவடிக்கையின் போது மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பல ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 60 ஆயிரம் யூரோ பணம் மீட்கப்பட்டது.
ஸ்பெயினில் ஒரு குற்றவியல் குழுவால் நடத்தப்படும் சட்டவிரோத துப்பாக்கிச் சூடு தளத்தை முதல் முறை காவல்துறை கண்டுபிடித்தது.